Friday, February 12, 2010

அ‌ஜீத்தின் உ‌ரிமைக்குரலும் நடிகன் என்ற சர்வரோக நிவாரணியும்

"எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும், அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும் மிரட்டுறாங்க."

கடந்த 6ஆ‌ம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வ‌ரின் முன்னால் அ‌ஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அ‌ஜீத்தின் பேச்சைக் கேட்ட ர‌‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்து கை தட்டிய இன்னொருவர் இயக்குனர் சேரன்.

WD
அ‌ஜீத்தின் பேச்சு திரையுலகிலும் அதற்கு அப்பால் ஊடகங்கள், பொதுமக்கள் மத்தியிலும் வாதப் பொருளாகியிருக்கிறது. அ‌ஜீத்தின் பேச்சையொட்டி திரையுலகினரும், பொது மக்களும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த கருத்துகள் என்ன என்று பார்ப்பதற்குமுன் திரையுலகினரை பல்வேறு பிரச்சனைகளுக்காக ஒன்று திரட்டும், அவர்களை கட்டுப்படுத்தும் திரையுலக சங்கங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிவது அவசியம்.

உலகில் எல்லாத் துறைகளிலும் சங்கங்கள் உண்டு. தமிழகத்தில் ஐடி மற்றும் காவல்துறை நீங்கலாக அனைத்துத் துறைகளிலும் சங்கங்கள் செயல்படுகின்றன. கட்சி சார்ந்த, கட்சி சாராத பல சங்கங்கள் ஒரு துறையில் இருக்கும். இதில் நமது கருத்தோட்டத்துடன் ஒத்துவரும் எந்த சங்கத்திலும் நாம் உறுப்பினராகலாம். எந்தச் சங்கமும் தேவையில்லை என்று சங்க அடையாளம் இன்றியும் ஒருவர் பணிபு‌ரியலாம். யாரும் உங்கள் வேலையை பறிக்க மாட்டார்கள். தனி மனித சுதந்திரம் வெளிப்படையாக சங்கங்களால் சுரண்டப்படுவதில்லை. மேலும், வேலையில் சேர்வதற்குமுன் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எந்த சங்கத்தில் சேர்வது அல்லது சேராமல் இருப்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் ஒருவ‌ரின் தனி மனிதஉ‌ரிமை சார்ந்தது.

திரைத்துறையில் இப்படி கட்சி சார்ந்த கட்சி சாராத என்று பல சங்கங்கள் கிடையாது. நடிகர்களுக்கு என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று ஒரே சங்கம். இப்படி ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குனர்கள் என்று அனைத்துப் பி‌ரிவினருக்கும் ஒரே சங்கம்தான். இந்த சங்கங்களில் உறுப்பினராக இல்லாத ஒருவர் நடிக்கவோ, கலை இயக்குனராக பணிபு‌ரியவோ, லைட் தூக்கவோ ஏன் வாகனம் ஓட்டும் ஒரு சிறிய வேலையைகூட செய்ய முடியாது. அதாவது இந்த சங்கங்களின் கருத்துகள், செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. திரைத்துறையில் நுழைய வேண்டும் என்றால் இந்த சங்கங்களில் நீங்கள் உறுப்பினராகித்தான் ஆக வேண்டும். திரைத்துறையில் நுழையும் போதே பிடித்ததை தேர்வு செய்யும் ஒருவ‌ரின் தனி மனித உ‌ரிமை காவு வாங்கப்பட்டுவிடுகிறது. கலைக்கு எல்லை கிடையாது, காற்றைப் போல அது சுதந்திரமானது என்றெல்லாம் கூறப்படும் திரைத்துறை இதுபோன்ற கட்டுப்பாடான சங்கங்களால்தான் பேணப்பட்டு வருகிறது.

நடிப்பதற்கு விருப்பம், திறமை, வாய்ப்பு மூன்றும் இருந்தாலும் திரைப்படத்தில் நீங்கள் நடிக்க வேண்டுமென்றால் முதலில் நடிகர் சங்கத்தில் உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதற்கு சங்கத்துக்கு நுழைவுக் கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். அனைத்து சங்கங்களும் இப்படி பல ஆயிரங்களை நுழைவுக்கட்டணமாக வசூலிக்கின்றன. உதவி இயக்குனர்களுக்குதான் குறைந்த கட்டணம், 5,000 ரூபாய். இந்தப் பணத்தை செலுத்த முடியாத கலையார்வலர்களின் கதி என்ன என்பதை இதுவரை யாரும் விளக்கியதில்லை.

சில சங்கங்களில் பணம் இருந்தாலும் உறுப்பினராக சுலபத்தில் சேர்ந்துவிட முடியாது. உதாரணமாக, நடனக் கலைஞர்களுக்கான சங்கத்தில் ஏற்கனவே அதிகம் பேர் இருப்பதால் புதிய உறுப்பினர்களை அவர்கள் சமீபமாக சேர்ப்பதில்லை. யாரேனும் ஓய்வு பெறும்போது காத்திருந்து பல லட்ச ரூபாய் கொடுத்து அந்த உறுப்பினர் கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குள் நடனம் மறந்துப் போகாமல் பேண வேண்டியது உங்களின் கடமை.

இப்படியான கறாரான சங்க அமைப்பிலிருந்துதான் திரைத்துறையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. மூன்று விதமான பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த‌க் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

முதலாவதாக நடிகர் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களின் நலனுக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தும்போது பிறப்பிக்கப்படுவது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை தொடங்குகிறார்கள். அப்படியும் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பஞ்சாயத்துகள் நடத்தப்படும். பல நடிகர்கள், நடிகைகள் இந்த நெருக்கடியை சந்தித்திருக்கிறார்கள்.

‘நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதனால் சங்க கடனை அடைக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது, அதேநேரம் கடனை அடைக்க என்னாலான பண உதவி செய்கிறேன்’ என்று அ‌ஜீத் கூறிய போது அதனை ஏற்க அப்போதைய நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் மறுத்ததோடு அ‌ஜீத்தை அவன் இவன் என்று ஏக வசனத்தில் திட்டிய சம்பவமும் நடந்திருக்கிறது.
இரண்டாவதாக ஆளும் கட்சியால் பெறப்பட்ட, பெறப் போகும் சலுகைகளுக்காக முதலமைச்சரை குளிர்விக்க நடத்தப்படும் பாராட்டு கூட்டங்கள். திரையுலக சங்கங்கள் கட்சி சார்பற்றவை என்றாலும் சலுகைகளை முன்னிறுத்தி ஆளும் கட்சிக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்பவை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட பாராட்டு கூட்டத்தில் தாயே உன்னால்தான் தமிழ் திரையுலகம் பிழைத்திருக்கிறது என்று நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்கள். அம்மாவைப் பார்த்து ‘சன்’ தான் பயப்படணும், ‘சன்’னைப் பார்த்து அம்மா பயப்பட‌த் தேவையில்லை என்று நாடகம் போட்டார் எஸ்.வி.சேகர்.

கருணாநிதி முதலமைச்சரான போது காட்சி மாறியது. திரையுலகை காத்த சூ‌ரியனே என்றார்கள். சூ‌ரியன் இல்லையேல் இலை இல்லை என்பதாக நாடகம் உருமாறியது. இந்த அரசியல் கபடி அரங்கேற்றத்துக்கு திரைத்துறையினர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சங்கங்கள் ஆணை பிறப்பிக்கும். அதாவது ஒருவரை திட்டுவதற்கும், வாழ்த்துவதற்கும் ஒரே மனநிலையுடன் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். உங்களின் தனிப்பட்ட கருத்து ஒரு பொருட்டல்ல. மீறினால் தடை, ரெட் கார்ட்.

WD
சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த த்‌ரிஷா,்‌ரியாமணி, ஸ்ரேயா ஆகியோ‌ரின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் விடுத்த அறிக்கை அனைத்துப் பத்தி‌ரிகைகளிலும் வெளிவந்தது. நடனமாட முடியாது என்பது ஒரு நடிகையின் நடிக‌ரின் தனி மனித உ‌ரிமை சார்ந்த முடிவு. அதற்கு தண்டனை விதிக்க சங்கங்களுக்கு உ‌ரிமை தந்தது யார் என்ற அசட்டு கேள்விகளை யாரும் கேட்க கூடாது.

மேலும், இதுபோன்ற துதிபாடும் நிகழ்ச்சியில் நடனமாடாத, கலந்து கொள்ளாத அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீங்கள் நினைக்கலாகாது. ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நெப்போலியன், தியாகு, சந்திரசேகர் உள்ளிட்ட திமுக அனுதாபிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. கருணாநிதிக்கு நடந்த பாராட்டு கூட்டத்தில் அதிமுக அனுதாபிகள் பங்கேற்கவில்லை. அ‌ஜீத்தை ஏக வசனத்தில் திட்டிய முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தயா‌ரிப்பாளர் சங்க உறுப்பினருமான விஜயகாந்தும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மீது பெப்சி தலைவர் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கவில்லை. த்‌ரிஷா, ஸ்ரேயா, அ‌ஜீத் போன்ற கட்சி சார்பற்றவர்களுக்கு மட்டுமே தண்டனை. கட்சி சார்புள்ளவர்களுக்கும், கட்சி நடத்துகிறவர்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் ரகசிய பொது மன்னிப்பும் வழங்கப்படும்.

மூன்றாவதாக, ஒட்டுமொத்த தமிழினம் சார்ந்த ஓகேனக்கல், காவி‌ி, ஈழம் போன்ற பிரச்சனைகளுக்காக திரையுலகினரை ஒன்று திரட்டுவது. பெரும்பாலும் அப்போதைய ஆளும் கட்சியின் தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் பே‌ரிலேயே இந்த ஒன்றுகூடும் வைபவம் நடத்தப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் காவி‌ரிப் பிரச்சனைக்காக திரையுலகினர் பாரதிராஜதலைமையில் போராட்டம் நடத்தினர். இதற்குப் பின்னால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியும், வழிநடத்தலும் இருந்தது என்பது உலகறிந்த ரகசியம். அதே பாரதிராஜஒகேனக்கல் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சில‌ரின் தூண்டுதலின் பே‌ரில் அது நடத்தப்படுவதாக குற்றம்சாற்றினார்.

மேலும், இதுபோன்ற கூட்டங்களால் எந்தப் பிரச்சனையிலும் கடுகளவு முன்னேற்றம் ஏற்பட்டதா என்றால் இல்லை. மாறாக பிரச்சனையை திசை திருப்புவதாகவே இவை அமைந்திருக்கின்றன.

நெய்வேலி போராட்டத்தில் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை அழைக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறி மூன்று மாவட்ட ரசிகர்களுக்கு ரகசிய அழைப்புவிடுத்தார் விஜயகாந்த். வண்டிகளில் வந்து குவிந்த அவர்கள் விஜயகாந்தை வாழ்த்திப் போட்ட கோஷத்தால அந்த போராட்டத்தின் நோக்கமே மாறிப்போனது. மேலும், எலிக்கறி தின்னும் விவசாயிகளுக்காக ஒன்று திரண்ட திரையலகினருக்கு ஒன்பது வகையான அசைவ உணவுகள் ப‌ரிமாறப்பட்டன. அவை எந்தெந்த உணவுகள் என்ற பட்டியலை சில ஊடகங்கள் உற்சாகமாக வெளியிட்டன. சகலகலா வல்லவனுடன் ஒரே கா‌ரில் வந்த இஞ்சி இடுப்பழகி யார் என்று காஸிப் எழுதி மகிழ்ந்தன வேறு சில ஊடகங்கள்.

திரையுலகினர் நடத்தும் இத்தகைய போராட்டங்களை காணக் குவியும் ரசிகர்கள் தங்கள் விருப்பமான நடிகர்கள் வரும்போது எழுப்பும் கரகோஷம் சாவு வீட்டில் எழுப்பும் உற்சாக கூச்சல்களுக்கு ஒப்பானவை. தமிழன் பிரச்சனைக்கு தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் நடிகன் போராட வேண்டும் என்று கோ‌ரிக்கை வைப்பவர்கள் இந்த கூத்தை மனதில் இருத்திக் கொள்வது அவசியம்.

(அதேநேரம் திரையுலகின‌ரில் ஒரு பி‌ரிவினர் தன்னிச்சையாக முன் வந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஈழப் பிரச்சனை. இதில் இயக்குனர்கள் காட்டிய எழுச்சி ச‌ரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள யாரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை, மிரட்டப்படவில்லை. இன எழுச்சி ஆற்றொழுக்காக தானாக எழுந்தது, தமிழகமெங்கும் பரவியது. தமிழினத்துக்கு துரோகம் இழைத்த பெரும் தலைகள் இந்த எழுச்சியால் தேர்தலில் மண்ணை‌க் கவ்வினர்).

காவி‌ி, ஒகேனக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு போராடும்போது வேறொரு வன்முறையும் தொடர்ந்து அரங்கேறுகிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட முரளி, ர‌‌ஜினி, அர்ஜுன், பிரகாஷ்ரா‌ஜ் போன்ற நடிகர்களிடம் கன்னடர்களுக்கு எதிரான கருத்துகளை சொல்ல வலுக்கட்டாயமாக மைக் அவர்கள் முன் திணிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் அவர்கள் சொல்லும் கருத்து எவ்விதமான எதிர்வினைகளை உருவாக்கும் என்பது நாம் அறியாததல்ல.

மலையாள நடிகர் தமிழச்சியை எருமை என்று சொன்னதற்கு நாம் கொந்தளித்தோம், வழக்கு தொடர்ந்தோம், வீட்டை அடித்து நொறுக்கினோம், தீ வைத்தோம். அவர் கையெடுத்து மன்னிப்பு கேட்ட பிறகும், யாரை எருமை என்றாரோ அவரது பாதத்தை கண்ணீரால் கழுவ வேண்டும் என்று ஊடகம் மூலமாக கோ‌ரிக்கை வைக்கிறோம். இன உணர்வில் தமிழனுக்கு இரண்டு கொம்பென்றால் கன்னடக்காரனுக்கு ஒன்பது கொம்புகள். அவனை விமர்சித்துவிட்டு ர‌‌ஜினியோ, முரளியோ கர்நாடக எல்லையில் கால் வைக்க முடியுமா?

ஆனால் இந்த நடிகர்களின் வீடுகள் கர்நாடகாவில் இருக்கின்றன. உறவினர்கள், நண்பர்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். அவர்கள் கர்நாடகா செல்ல வேண்டியது வாழ்வின் அவசியமாகிறது. இதனை தெ‌ரிந்து கொண்டே அவர்களின் முன் மைக்கை திணிக்கும் நமது புரட்சி‌த் தமிழர்களுக்கு கர்நாடகா செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் படங்கள் கர்நாடகாவில் ஓடுவதுமில்லை. பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு வீர வசனம் பேசுகிறார்கள். மற்றவர்களையும் பேசும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.

அதேநேரம் இந்த புரட்சி‌த் தமிழர்கள் பாபா படப்பெட்டியை பாமக-வினர் தூக்கிச் சென்ற போதும், முதல்வன் பட சிடிகள் மதுரையில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட போதும் வாயே திறக்கவில்லை. காரணம் அவர்கள் வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. படங்கள் தமிழ்நாட்டில் ஓட வேண்டும். வாய் திறந்து பேசினால் வீடு தாக்கப்படலாம், படப் பெட்டி கடத்தப்படலாம். கருத்து சொன்னால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை தெ‌ரிந்து கொண்டே கன்னடர்களுக்கு எதிராகப் பேச இவர்கள் மற்றவர்களை வற்புறுத்துகிறார்கள். இது ஒருவித மிரட்டலே அன்றி வேறில்லை.

இதுபோன்ற இறுக்கமான தனி மனித சுதந்திரத்துக்கு வழியில்லாத சூழலில்தான் மௌனத்தை கலைத்து உ‌ரிமைக்கான குரலை தகுதியானர்வர்களின் முன்பு ஒலித்திருக்கிறார் அ‌ஜீத். இந்தப் பின்புலத்தில்தான் அவரது பேச்சை பு‌ரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து அ‌ஜீத்தை தமிழின விரோதியாக பிரச்சனையை மடைதிருப்புவது ஆபத்தானது. திரையுலகில் அ‌ஜீத்தால் முன் வைக்கப்பட்டிருக்கும் தனி மனித உ‌ரிமைக்கான குரலை அது சிதைத்துவிடவும் வாய்ப்புள்ளது.

WD
தமிழர்களுக்கும் அவர்கள் நலன்களுக்கும் அ‌ஜீத் எதிரானவர் என்ற இன விரோதி பிம்பத்தை வரைவதில் சில ஊடகங்களும், அவரது தொழில் விரோதிகளும் ஏற்கனவே தங்களது பங்களிப்பை‌க் காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு இனத்தூய்மை என்ற தூ‌ரிகையை அவர்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களும் கூட இந்த போலி பிம்பத்துக்கு மயங்கிவிடுகிறார்கள். அ‌ஜீத்தின் பேச்சை அங்கேயே ஆத‌ரித்த சேரன், ர‌‌ஜினி இருவரையும் இவர்கள் தாக்கவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இன உணர்வை வெளிப்படையாக காட்டும் சேரனை இனத்தின் பெயரைச் சொல்லி விமர்சிக்க முடியாது. ர‌‌ஜினியை விமர்சிப்பதன் மூலம் அவரது திரளான ரசிகர்களை பகைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு விருப்பமில்லை. மாட்டிக் கொண்டவர் அ‌ஜீத் மட்டும்.

‘தமிழ்நாட்டில் நடித்து தமிழர்களின் பணத்தில் வீடு, கார் என்று கொழுத்திருக்கும் நடிகன் தமிழர்களின் பிரச்சனையான ஓகேனக்கல், காவி‌ி பிரச்சனையில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது எவ்வளவு திமிர்த்தனம்?’ என்று திரையுலகினர் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் அ‌ஜீத் மீது பாய்ந்துள்ளனர். இந்த உளுத்துப் போன கேள்வியின் பின்னால் உள்ளது நமது அடிமை மனோபாவமே அன்றி வேறில்லை.

நடிகர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், ஆசி‌ரியர்கள், தொழிலதிபர்கள், வங்கிப் பணியாளர்கள், ‌ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், எல்ஐசி ஊழியர்கள், சாஃப்ட்வேர் இன்‌ஜீனியர்கள், கல்வி நிறுவனம் வைத்திருப்பவர்கள், டாஸ்மாக் பார் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினரும் தமிழ்நாட்டில் தொழில் செய்து தமிழர்களின் பணத்தில் சம்பாதிப்பவர்கள்தான். ஒகேனக்கல் என்பதும் காவி‌ி என்பதும் நடிகர்களுக்கேயு‌ரிய பிரச்சனை மட்டுமல்ல. இவர்களையும் சார்ந்ததே. முக்கியமாக நடிகர்கள் எப்படி கலந்து கொள்ள மாட்டேன் என்று திமிர்த்தனமாக பதிலளிக்கலாம் என்று கேள்வி கேட்பவர்களையும் உள்ளடக்கியதே.

மேலே உள்ளவர்களை தவிர்த்து நடிகர்களை மட்டும் கேள்வி கேட்பது நமது அடிமை மனோபாவத்தையே காட்டுகிறது. டாக்டர் செ‌ரியன் நூறு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவுடன் அவர் நாடாளும் தகுதி பெற்றுவிட்டதாக நாம் கருதுவதில்லை. ஒருவர் பத்து வழக்குகளில் சிறப்பாக வாதாடி ஜெயித்தால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றுவிட்டதாக நாம் போஸ்டர் அடிப்பதில்லை. ஒரு ஆசி‌ரியர் பல நூறு திறமையான மாணவர்களை உருவாக்கினால் அதுவே அவர் 2011ல் முதலமைச்சராவதற்கான தகுதி என்று நாம் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், ஒருவன் நாலு படம் நடித்தாலே அவனுக்கு நாடாளும் பொறுப்பு முதல் தமிழ‌ரின் பூர்வகுடி பிரச்சனை வரை அனைத்தையும் ஏற்று நடத்துகிற தலைமைப் பொறுப்பை வந்துவிட்டதாக கருதுகிறோம். வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடிக்கின்றோம். தலைவா தலைமை ஏற்க வா என்று கதறி ஒப்பா‌ி வைக்கிறோம்.

அதேபோல் செ‌ரியன் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்பதற்காக அவ‌ரிடம் கொலை வழக்கை யாரும் ஒப்படைப்பதில்லை. ராம்ஜெத் மலானி சிறப்பாக வாதிடுவார் என்பதற்காக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு யாரும் அவரை ப‌ரிந்துரைப்பதில்லை. காரணம் செ‌ரியனின் துறையல்ல வாதிடுவது. மலானியின் வேலையல்ல அறுவை சிகிச்சை செய்வது. அவர்கள் தத்தமது துறைகளில் மட்டுமே வல்லவர்கள். ஆனால் ஒருவன் மேக்கப் போட்டவுடனேயே தமிழர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய, அவர்களை வழிநடத்தக் கூடிய சர்வரோக நிவாரணியாக மாறிவிடுவதாக கற்பனையான ஒரு வாலை நம் புட்டத்தில் செருகி வசதிக்கேற்ப ஆட்டிக் கொள்கிறோம்.

இந்த கீழ்த்தரமான அடிமை மனோபாவத்தின் இன்னொரு வடிவம்தான் எந்தப் பிரச்சனையிலும் நடிகர்கள் கருத்து சொல்ல வேண்டும், முன்னின்று போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. நடிகர்களின் வேலை நடிப்பதுதான், அவர்களை அரசியல்வாதிகளின் வேலையை செய்யச் சொல்லாதீர்கள் என்கிறார் அ‌ஜீத். இதன் பொருள் நடிகனுக்கு சமூகப் பொறுப்பு இல்லை என்பதல்ல. நடிகர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் அவர்களை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள் என்பதே.

யாரும் வாய் திறந்து பேச முடியாத இறுக்கமான சூழலில் தனது கருத்தை,உ‌ரிமைக்கான குரலை அழுத்தமாக ஒலித்திருக்கிறார் அ‌ஜீத். அதன் அவசியம் பு‌ரிந்து கைத்தட்டி வரவேற்றிருக்கிறார் ர‌‌ஜினி. தனிமனித உ‌ரிமையின்பால் தாகம் உள்ள அனைவரும் அ‌ஜீத்தின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.

ஹேட்ஸ் ஆஃப் அ‌ஜீத்.

Wednesday, August 26, 2009

காதல் கவிதை


ஏனேன்றால் நீ பெண் ............

எனது

வயது வளமை

கனவு கல்வி

உறவு நட்பு

உயரம் எடை

தொடர்பு தொழில்,

இன்னும்

ஏதேதோ ஆரய்ந்து

தயங்குகிற உன்னை,

உயிராய்க்கொள்ள

உன் ஒற்றை

தெற்றுப்பல் சிரிப்பே

போதுமானதாக இருக்கிறது எனக்கு.



காய்ச்சல்


தயவு செய்து

மழையில்

நனையாதே

காய்ச்சல்

மழைக்கு.
காற்றை

சுவாசிக்கிறேன்

உயிர்

வாழ அல்ல

உன்

மூச்சு காற்றும்

அதில் கலந்திருப்பதால்..
.

உன் பார்வை

வார்தைகளால்

காயப்படுத்துவாய்.

பார்வைகளால்

மருந்திடுவாய்.

மருந்திற்கு

ஆசைப்பட்டு

காயப்பட்டுக்கொண்டே

இருக்கிறேன் நான்.

மயிலிறகு

பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில்

மயிலிறகை ஒழித்து

வைப்பதைப் போல

உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.

வைத்திருப்பவனின்
பிரியங்களை

ஒரு போதும்
புரிந்துகொண்டதேயில்லை

மயிலிறகும் நீயும்.


Monday, July 27, 2009

தமிழ் கவிதை


படித்ததில் பிடித்தது…………….

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

*********************************************

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

*********************************************

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

*********************************************

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

*********************************************

நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..

*********************************************

நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….

*********************************************

அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…

*********************************************

நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…

*********************************************

என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…

*********************************************

எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….

*********************************************

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

*********************************************

மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….

*********************************************

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

குழப்பம் !..

என்னவள் கவிதை எழுதினாள்..
கீழே கை எழுத்திட்டால்..
குழம்பினேன் ..
எது கவிதை என்று .

Monday, July 6, 2009

வெப் உலக ரெக்கார்டுகள்


யூடியூபின் மிக நீளமான வீடியோ - ஏறக்குறைய நாலரைமணிநேர வீடியோ
http://www.youtube.com/watch?v=Ct8nZ6eTTiY

யூடியூபின் மிக குறுகலான வீடியோ - .01 நொடி வீடியோ
http://www.youtube.com/watch?v=9uDgJ9_H0gg

இணையத்தின் மிகச் சிறிய வலைமனை
http://www.guimp.com

இணையத்தின் மிக உயரமான வலைமனை
http://worlds-highest-website.com

உலகின் முதல் .com இணையதள டொமைன் பெயர் (மார்ச் 15 1985)
http://www.symbolics.com

மிக குறுகிய இணையதள டொமைன் பெயர். வாடிகனின் வெப்சைட்.
http://www.va

மிக நீளமான இணையதள டொமைன் பெயர்.இது நார்த் வேல்ஸிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராம்.
http://www.llanfairpwllgwyngyllgogerychwyrndrobwyll-llantysiliogogogoch.com


வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!



உலகின் பெரிய domain name registrar (30.7 மில்லியன் டொமைன்பெயர்கள்)
http://www.godaddy.com

உலகின் முதல் ஆன்லைன் செய்தித்தாள் மே 1993, the Tech published by students from MIT, launched.
http://www-tech.mit.edu

24 மணிநேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் ஃபயர்பாக்ஸ் 3 (ஏறக்குறைய 8 மில்லியன் பதிவிறக்கங்கள்)

அதிக மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பவர் Sujit Ghosh.இவர் தனக்கென 5555 ஈமெயில் அக்கவுண்ட்களை வைத்திருக்கிறாராம்.

சாணக்கியன் சொன்னது


கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.

சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவு


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!




Friday, June 26, 2009

ஒருத்தனாவத

ஒருத்தனாவது பின்னூட்டம் போடுங்கடா டேய்!






MJ - வாழும் வரலாறு


MJவை உங்களுக்கு தெரியாது என்றால் உங்களுக்கு கண்களும், காதுகளும் இருப்பதே வீண்! செவிக்கு இசை, கண்களுக்கு நடனம் - கலக்கல் கிராபிக்ஸ் என்று இருபதாம் நூற்றாண்டின் கடைசித் தலைமுறையை கட்டிப்போட்டவர் நம்ம மைக்கேல் ஜாக்சன். சமீபத்தில் 1950ல் என்று சொல்லுபவர்களுக்கு எப்படி எல்விஸ் பிரெஸ்லியோ அதுபோல சமீபத்தில் 1991ல் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு மைக்கேல் ஜாக்சன்.

1958ல் பிறந்த மைக்கேல் ஜாக்சனுக்கு இப்போது வயது 49 (கரெக்டா சொல்லிட்டேன்!). அவர் பாடும் மொழி புரியாதென்றாலும் :-( நடனமும், பீட்டும் கால்களை தாளம் போட வைக்கும். சிறுவயதில் கமலென்றால் என்ன வெறியோ அதே வெறி MJ மீதும் இருந்தது. அவரது Beat it சிறுவயதில் எனக்கு செம பேவரைட். Billie Jeanல் அவர் நடத்திய Moon Walk எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

8 கிராமி அவார்டுகளை ஒரே இரவில் பெற்றவர். பாடகர், நல்ல நடனக்காரர் என்ற பிம்பங்களை தாண்டி மிக அருமையான இயக்குனர். கிராபிக்ஸ் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அவரது ஆல்பங்களுக்கு மிகச்சரியான முறையில் கிராபிக்ஸ்களை பயன்படுத்தினார். Black & Whiteல் அவர் பயன்படுத்திய மார்பிங் உத்தி அதன்பின்னர் பல பாப் பாடல்களிலும், திரைப்பாடல்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. நான் மார்பிங் படித்ததே அந்த பாடலைப் பார்த்து தான்.

MJவின் பாடல்கள் பல நடன இயக்குனர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் நல்ல ரெபரென்ஸ். டைரக்டர் ஷங்கர் இன்றுவரை MJ பாடல்களை வைத்தே விஷுவல்ஸ்களை ஒப்பேத்தி வருவது நல்ல உதாரணம். MJவின் Smooth Criminal முக்காலா முக்காப்புலா முதல் தீ.. தீ... ஜெகஜோதீ.. ஜோதீ.. ஜோதீ.. வரை பல வடிவங்களுக்கு மாறியிருக்கிறது. ஒரு ஆல்பத்தில் பரதநாட்டியத்தையும் மேற்கத்திய முறைக்கு மாற்றி அழகாக பயன்படுத்தியிருப்பார். They don't care of us பாடல் மூலமாக ஜாக்ஸன் புரட்சிக்காரனாகவும் அறியப்பட்டார்.

கருப்பர் இனத்தில் பிறந்தவரான மைக்கேல் ஜாக்சன் பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலமாக கிட்டத்தட்ட வெள்ளையராக உருவத்தில் மாறிவிட்டார். கின்னஸ் புத்தகம் வெளியீட்டாளர்களால் "Most Successful Entertainer of All Time" என்று பாராட்டப்பட்டவர். இதுவரை வெளியிடப்பட்ட இசை ஆல்பங்களிலேயே முறியடிக்கப்படாத சாதனை படைத்தது ஜாக்ஸனின் "த்ரில்லர்". அந்த ஆல்பம் மட்டும் 104 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி எட்டாத உயரத்தில் ஜாக்ஸனை நிறுத்தியது.

சமூகசேவைகளுக்காக தன் வருமானத்தில் பெரும் பகுதியை செலவழிப்பவர் ஜாக்ஸன். அவர் தற்போது வசிக்கும் இல்லம் அமெரிக்காவில் பெரும் பிரசித்தி பெற்றது. அவரது இல்லம் ஒரு தனி அரசாங்கம் என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் சொல்வார்கள். சர்ச்சைகளுக்கும் ஜாக்ஸன் வாழ்வில் குறையில்லை. திருமணம் - டைவோர்ஸ் - மீண்டும் திருமணம் - மீண்டும் டைவோர்ஸ் என்று பர்சனல் வாழ்க்கை அவருக்கு நிலையில்லாததாகவே இதுவரை இருந்திருக்கிறது.

அனாதை குழந்தைகளுடனான தவறான உறவு, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பில்லாமல் நிறுத்துவது, தேவையில்லாத விளம்பர ஸ்டண்ட் என்று ஜாக்ஸன் மீது அடுக்கடுக்காக (சில சமயங்களில் அபத்தமாக)குற்றங்கள் தொடர்ந்து சாட்டப்பட்டாலும் அவரது ரசிகர்களுக்கு அதைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை. அவர்கள் ரசிப்பது ஜாக்ஸனின் இசையையும், நடனத்தையும்... அதைத் தவிர்த்து ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளப் போவதில்லை.

உலகின் கடைசி மனிதனுக்கு காது கேட்கும் வரை MJன் இசை காற்றில் வியாபித்திருக்கும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபோது எழுதியது. இசை மீண்டும் ஒருமுறை இறந்துவிட்டது! :-(

Friday, June 19, 2009

இசைஞானி..

கர்வம் கொண்டவரா இசைஞானி?



கர்வம் கொண்டவரா இசைஞானி?

ற்றுத் தாமதம்தான் என்றாலும் இந்தக் கட்டுரையை பதிவு செய்யக் காரணம், இளையராஜா என்ற மாமேதையின் தரத்தை நம் குரலிலும் ஒருமுறை உரக்கச் சொல்லிவிடும் ஒரு ஆசைதான்!

thiruvasagam-rajini01fafசிலர் இளையராஜா கர்வம் பிடித்தவர், யாரையும் மதிக்காதவர் என்று மேம்போக்காக சொல்லிக் கொண்டு அல்லது வேறு யாருடனாவது ஒப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

அது தொடர்பில் எக்கச்சக்க வாதப் பிரதிவாதங்களும் எழுவது வழக்கம்.

சில தினங்களுக்கு முன் வால்மீகி ஆடியோ வெளியீட்டு விழாவில் ராஜா பேசியதை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு திரித்து வெளியிட்டு மகிழ்ந்தனர் சிலர். அதில் அப்படி என்ன திருப்தியோ தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது பேச்சின் வீடியோ வடிவம் கூட இப்போதும் கிடைக்கிறது.

உண்மையில் ராஜாவின் பிரச்சினையே அவரால் பக்கா பிஸினஸ்மேனாக நடந்து கொள்ளத் தெரியாததுதான். காரணம் இன்னமும் தமிழ் சினிமாவை அவர் ஹைடெக் தொழிலாகச் செய்யாததே.

“ராஜா சாருக்கு ஏன் தயாரிப்பாளர் தரப்பில் அல்லது படைப்பாளிகள் சிலருடன் மோதல் எழுகிறது தெரியுமா… தொழில் வேறு நட்பு வேறு என்று அவருக்குப் பார்க்கத் தெரியாததுதான். வியாபார விஷயங்களை அவர் சார்பில் பேச யாரும் இல்லை, அல்லது அவர் அப்படி ஒருவரை வைத்துக் கொள்ளாததே அவர் மீதான பல விமர்சனங்களுக்குக் காரணமாகிறது…”, இதை நம்மிடம் ஒரு முறை சொன்னவர் ஃபாதர் ஜெகத் கஸ்பர்ராஜ். இவர்தான் திருவாசகம் ஆடியோவின் வெளியீட்டாளர்.

உண்மையில் திருவாசகம் ஆரட்டோரியோ கிராம்மி விருதுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது. போயிருந்தால் நிச்சயம் விருதும் கிடைத்திருக்கும். ஆனால் அந்த இசை வெளியீடு தொடர்பில் ராஜாவுக்கும் - கஸ்பருக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அந்த இசையை அமெரிக்கா வரை செல்ல விடாமல் நிறுத்திவிட்டது. இதை நக்கீரன் தொடரில் ஜெகத் கஸ்பரே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

ஒரு முறை இருமுறை அல்ல… பல முறை தேசிய விருதுகளையும், சர்வதேச விருதுகளையும் இப்படி தவற விட்டவர் ராஜா மட்டும்தான்.

‘கொஞ்சம் பணிந்து போனால்தான் என்ன குறைந்துவிடுவார்…?’ என்று சிலர் கேள்வி எழுப்புவதையும் பார்க்கலாம். மணிரத்னம், பாலச்சந்தர் போன்றவர்களிடம் ராஜா பணிந்து போக மறுத்ததற்கு நியாயமான காரணங்கள் உண்டு. சுஹாஸினி போன்ற அரைவேக்காட்டு புத்திஜீவிகளின் கமெண்ட்டுகளுக்கு அவர் பதிலே சொல்லாமல் போனதற்கும் காரணம் உண்டு.

அவர் பணிய வேண்டிய அவசியமென்ன… நல்ல திறமைக்கு தலை வணங்க வேண்டியது ரசிகர்கள்தான். உண்மையில் ராஜா யாருக்கும் பணிவதும் இல்லை… யாரும் தன்னை தொழ வேண்டும் என விரும்புவதும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் பிஆர்ஓவுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தோம். அப்போது ராஜா ஒரு திரைப்படங்களின் கம்போஸிங்கில் பிஸியாக இருந்தார். காலை நேரம். சிற்றுண்டி முடித்து சில நிமிடம் வெளியில் அமர்ந்திருந்தார். அப்போது நாம் வந்திருப்பதை அவரிடம் உதவியாளர் சொல்ல, அவரும் வரச் சொன்னார்.

பார்த்தவுடன் அவரை வணங்கினோம். ஆசி கூறியவர், ‘நல்லா இருக்கீங்களா? பேட்டி தவிர என்ன வேணா கேளுங்க!’ என்றார் சிரித்துக் கொண்டே. உடன் வந்திருந்த ஒரு நண்பரைக் காட்டி, ‘இல்லண்ணே… இவர் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா வைக்க ஆசைப்படறார்… வர முடியுமா?’ என்றோம்.

அழைப்பிதழையும் கையோடு அச்சடித்து எடுத்து வந்திருந்தார் அந்த நண்பர். அதாவது ராஜா சார் அனுமதி இல்லாமலேயே. அழைப்பிதழை வாங்கிப் பார்த்தவர், ‘நான் எந்த நிகழ்ச்சிக்குய்யா இப்பல்லாம் போறேன்… யுவன் கூப்பிட்டாக் கூட போறதில்லை… இதுல என்னைப் பாராட்டி என்ன சொல்லப் போறீங்க… எதுக்கு அதெல்லாம்?’ என்றார்.

ஆனால் வந்தவரோ எப்படியாவது ராஜா தன் நிகழ்ச்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவரிடம் பொறுமையாக தனது நிலைமைச் சொன்ன இசைஞானி, “தம்பி… உங்களுக்கு என் மேல இருக்கிற அன்பு புரியுது. உன்னை மாதிரி அன்பர்களுக்கு என் ஆசீர்வாதம் உண்டு. என் அனுமதியில்லாமலேயே அழைப்பிதழ் அடிக்கும் அளவுக்கு நீங்க உரிமையோட நடந்துகிட்டீங்க. இந்த அன்பு இருந்தா போதும்யா… நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க… பாத்துட்டுப் போங்க…” என்றார்.

சாதாரணமாக அவர் எப்படி பழகுவார் என்பதற்கு அதுவே ஒரு உதாரணம்தான். “இளையராஜாவை அறியாதவர், அறியாதாரே” என்று வாலி பாடியது இதற்காகத்தான்.

இது அவரைப் போற்றிப் புகழ எழுதப்படும் பதிவல்ல. மகாபாரதம் சொல்வது போல, “அறிஞர்களையும் கலைஞர்களையும் காலத்தில் போற்றாத நாடு, ஒரு நாடுமல்ல, அதன் மன்னன் நல்ல ஆட்சியாளனுமல்ல..”, என்பதை நினைவுபடுத்தி, ராஜா பற்றிய இந்த குறிப்பைத் தருகிறோம் (ராஜா பற்றிய குறிப்புகள் மட்டும் தட்ஸ்தமிழிலிருந்து…).

Tuesday, May 26, 2009

முத்தக் கவிதைகள்

kiss2.jpg

உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ?

kiss2.jpg

எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள முடியும்
உன்
மெல்லிய முத்தத்தைத் தவிர.

kiss2.jpg

உயிரும் உயிரும்
மேலேறி
கூடு விட்டுக் கூடுபாயும்
மந்திரம் கற்குமிடம்
நம்
உதடுகள் சந்திக்குமிடமா ?

kiss2.jpg

நீ
மழலைத் தெருவில்
முத்தம் விதைத்து நடக்கிறாய்
என்னைக் கண்டதும்
கருமியாகிறாய்.

kiss2.jpg

வல்லினம் மட்டுமே
யுத்தத்துக்குப் பயன்படுமென்று
உன்
முத்தத்துக்கு முன்பு வரை
ஒத்துக் கொண்டிருந்தேன்
நான்.

kiss2.jpg

ஒத்தடம்
காயம் தருமென்பதை
உன்
உதடுகள் தானடி
உறுதிப் படுத்தின
kiss2.jpg

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.

kiss2.jpg

உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என்
பருகுதலை
பின்வாங்க மறுக்கிறேன்.

என்
தன்னம்பிக்கை முனையில்
தற்கொலை செய்கின்றன
தயக்கங்கள்

kiss2.jpg

முத்தப் போருக்கு
நீ
தயாரா ?
எனக்கு
புறமுதுகு பழக்கமில்லை.

kiss2.jpg

உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா

kiss2.jpg
நீ
என் உதடுகளில்
போர்த்திச் சென்ற முத்த ஆடை
என்
உள்ளத்துக் குளிரை
அள்ளிக் குடித்து,
வெப்பம் ஊற்றிப் போகிறது.

கண்களில் மட்டும்,
இன்னும் விலகவில்லை
துருவத்துக் குளிரின்
பருவத் துள்ளல்.

kiss2.jpg

உனக்கான முத்தங்களை
என்
படுக்கைத் தலையணையில்
தவறாமல் இட்டு வைக்கிறேன்.
என்றேனும்
மறக்காமல் வந்து
பெற்றுப் போ,
தலையணையை.
kiss2.jpg

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.


தேவதை தரிசனம்!

நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.

உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.

இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.


பெண் !..

கள்ளிப்பாலை
கவனமாய்
ஊற்று.
தொண்டைக் குழிக்குள்.

வேகமாய் சுற்றும்
மின் விசிறி இருந்தால்
சுவிட்சைப் போட்டு
கதவைப் பூட்டு.

இல்லையேல்
தண்ணீர் தொட்டிக்குள்
தூக்கிப் போடு.

அல்லது
கொஞ்சம் நெல்லையாவது
வாய்க்குள் போடு.

அப்படியே
வீட்டுக்கும் தீ வை.

இருபது வருடம் கழிந்து
இடிவிழவும்
சாத்தியமுண்டு.

இப்படியும் எழுதலாம்

rr1

நிலவில் நடப்பதை
விட
நிலவுடன் நடப்பதே
பெருமை
காதலுக்கு

2

காதல்
வாழ்க்கையைத் தருமாம்
மரணங்கள்
சொல்கின்றன

3

முதல் பார்வையில்
காதல் வருமென்பதை
நம்புங்கள்
இல்லையேல்
காதல் வருகையில் தான்
முதல்
பார்வை வருமென்பதையேனும்

by


பெண் பார்த்தல்…

dsc_0198

நாளை
உன்னைப்
பெண்பார்க்கப் போகிறேன்.

நம்
ஜாதகங்கள்
சில நாட்களுக்கு முன்
சந்தித்து
வருத்தமற்ற பொருத்தமென்று
கைலுக்கிக் கொண்டன.

உன்
சுற்றத்தோடு
என்
தூரத்து சொந்தங்கள்
தொலைவிலிருந்தே
தகவல் திரட்டிய
அத்தனை
ஆய்வு அறிக்கைகளும்
சாதகமாகவே அமைந்தன.

உன்
மத நம்பிக்கைகளையும்
என்
மத நம்பிக்கைகளையும்
மதில் சுவருக்கு வெளியே நின்று
யாரோ
ஒப்பிட்டுச் சொல்லி
சந்தோஷித்தார்கள்.

உன்
பொருளாதார பலமும்,
என்
நிகழ்கால வளமும்
நமக்கு எதிராய்
சதி வலைகள் பின்னவில்லை.

நீ என்னையோ
நான் உன்னையோ
சந்தித்ததில்லை,
எனக்குள்
விரியும் எதிர்பார்ப்பு தான்
உனக்குள்ளும் எரியும் என்பது
புரிகிறது எனக்கு.

நாளை
உன்னிடம் பேசப்போகும்
முதல் வாக்கியம்
என்ன என்பது மட்டும்
சிக்கவேயில்லை இன்னும்.

ஏதேனும்
யோசித்து வைத்திருக்கிறாயோ
நீ
என்னிடம் பேச

அடக் கடவுளே !

god

அழித்தவனும் சொன்னான்
அழிப்பவனும் சொல்கிறான்
ஆண்டவன் என் பக்கம்.

ஆத்திகர்கள்
குழுக்களாய்
ஆர்ப்பரித்தார்கள்

நாத்திகர்கள்
நகம் கடித்து
நகைத்தார்கள்.

ஆண்டவன் திகைத்தான்,
யாருமில்லையா
என் பக்கம் ?

உலகை உலுக்கிய செய்திப்படம்


நரகமல்ல, அதைவிடக் கொடியது !

zim1

உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது.

ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன.

zim3

நிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது.

ஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது.

இந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழாயிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு.

zim2

ஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன.

காட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார்.

ஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது,

zim5

வெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன் மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க.

ஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர்.

zim4

பொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது.

எத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜிம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

உணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள்.

அடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள்.

அப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன.

இந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர்.

zim6

ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது.

ஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.

குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !


விடைபெறுகிறார் பிரபாகரன்!? என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது.

குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம்.

வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந்திருக்கும் என்பதால் இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா!

குமுதம்: உங்களுக்கு ராகுல்வின்சியைத் தெரியுமா? இது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு ராகுல் கொடுத்த பெயர். ராகுல் காந்தி என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் இந்த மாற்றமாம்.

வினவு: ராகுல் காந்தி படிப்பில் மகாமட்டம் என்பது உலகறிந்த விசயம். இதில் ஹார்வர்டில் எப்படிச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் மகா ரகசியம். இந்த தலைமறைவு வாழ்க்கையில் அவர் தனது கொலம்பியா தோழியுடன் ஊர்சுற்றி விட்டு இப்போது பிரதமர் இமேஜூக்குகாக அந்த அப்பாவிப் பெண்ணை கழட்டி விட்டதாக அறிகிறோம். உண்மையா?

குமுதம்: விமானப் பயணங்களின் போது ராகுல் மறக்காமல் எடுத்துச் செல்வது புத்தகங்கள். அரசியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள் உட்பட சற்று கனமான டாபிக்குகள் ராகுலின் சாய்ஸ்.

வினவு: தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் நடிகைகள் ஆங்கிலமே தெரியாவிட்டாலும் பந்தாவுக்காக ஆங்கில கிரைம் நாவல்களைப் படிப்பதாக பேட்டியில் அளப்பார்கள். கல்லூரியின் பாபா பிளக்ஷிப் பாடத்திட்டத்தை படிப்பதற்கே ஸ்போர்ட்ஸ் கோட்டா தேவைப்பட்டவர் இப்படி கண்ட கண்ட கனதியானதை எல்லாம் படிக்கிறார் என்றால்…..?

குமுதம்: வெளிநாடுகளில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது அவரது ஆசை மும்பையில் ஒரு அவுட் சோர்ஸிங் கம்பெனி நடத்த வேண்டும் என்பதுதான்.

வினவு: காங்கிரசு ஆட்சியில் இந்தியாவையே முழுதாக விற்றுவிட்டு அவுட்சோர்சிங் செய்கின்ற வேளையில் ராகுல் அந்த சின்ன ஆசையை மறந்ததில் என்ன வியப்பு?

குமுதம்: நிருபர்களுக்கு ராகுல் ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்கிற ஒரே கேள்வி, “அமிதாப்பச்சன் பற்றி என்ன நினைக்கிறீங்க?” அமிதாப் குடும்பம் என்றாலே ராகுலுக்கு அல்ர்ஜியாம்.

வினவு: டாடி இந்திய அமைதிப் படையை ஈழத்திற்கு அனுப்பி எத்தனை தமிழ் மக்களைக் கொன்றார் என்று கேட்டால் அவருக்கு அலர்ஜி இல்லாமல் போகுமா என்ன?

குமுதம்: அரசியலில் இல்லாத தனது நண்பர்கள் மூலம் உத்தரப் பிரதேசத்தில் அடிக்கடி ரகசிய கருத்துக் கணிப்புகள் நடத்தி, மக்களின் நாடி பிடித்துப் பார்ப்பது ராகுலின் வழக்கம்.

வினவு: செட்டி நாட்டு சிதம்பரத்திற்காக தேர்தல் பரப்புரை செய்ய சிவகங்கை வந்த ராகுலுக்கு எமது தோழர்கள் கருப்புக்கொடி காண்பித்து முழக்கமிட்டதும் அவரது பேர்&லவ்லி முகம் இருண்டுபோனது. அடுத்த முறை இங்கும் கணிப்பு எடுத்து விட்டு வரவும்.

குமுதம்: மிதுன ராசிக்காரரான ராகுலுக்கு வாட்ச், மோதிரம் அணிவதில் விருப்பம் கிடையாது. அக்கா கட்டிய ராக்கியை தனது சென்டிமெண்ட்டாக நினைத்து தேர்தலின்போது அணிந்திருந்தார்.

வினவு: தங்கை பிரியங்காவை அக்காவாக குமுதம் ஏதோ தமிழ்நாட்டு அக்காவை நினைத்து எழுதிவிட்டது போலும். போகட்டும். தங்கை பாட்டி இந்திராவின் சேலையை சென்டிமெண்ட்டாக அணிந்து தேர்தல் பரப்புரை செய்து எல்லோரிடமும் இதுதான் இந்திரா சேலை என பீற்றினாராம். அதுபோல அப்பாவின் குர்தாவை ராகுல் அணியலாம். இதையெல்லாம் நியூசாக்கி காசு பார்ப்பதற்கு இளித்தவாய இந்தியர்கள்தான் இருக்கிறார்களே.

குமுதம்: அக்கா பிரியங்கா காந்தியின் செல்லக் குழந்தைகள் மிராயாவும், ரைகானும்தான் ராகுலின் ஃபேவரைட் புஜ்ஜிமாக்கள்.

வினவு: பின்னே ஈழத்தில் பெற்றோரை குண்டுவீச்சில் இழந்து கதறிக்கொண்டிருக்கும் குழந்தைகளா அவருக்கு பிடிக்கும்?

குமுதம்: ராகுலுக்குப் பிடித்த விளையாட்டுகள் ஸ்குவாஷூம், செஸ்ஸும், ஸ்கூபா டைவிங்கும்.

வினவு: டாடிக்கு விமானம் ஓட்டுவது பிடிக்கும். மம்மிக்கு என்ன பிடிக்கும்?….சிங்கள விமானங்கள் போடும் குண்டுகள்…..?