MJவை உங்களுக்கு தெரியாது என்றால் உங்களுக்கு கண்களும், காதுகளும் இருப்பதே வீண்! செவிக்கு இசை, கண்களுக்கு நடனம் - கலக்கல் கிராபிக்ஸ் என்று இருபதாம் நூற்றாண்டின் கடைசித் தலைமுறையை கட்டிப்போட்டவர் நம்ம மைக்கேல் ஜாக்சன். சமீபத்தில் 1950ல் என்று சொல்லுபவர்களுக்கு எப்படி எல்விஸ் பிரெஸ்லியோ அதுபோல சமீபத்தில் 1991ல் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு மைக்கேல் ஜாக்சன்.
1958ல் பிறந்த மைக்கேல் ஜாக்சனுக்கு இப்போது வயது 49 (கரெக்டா சொல்லிட்டேன்!). அவர் பாடும் மொழி புரியாதென்றாலும் :-( நடனமும், பீட்டும் கால்களை தாளம் போட வைக்கும். சிறுவயதில் கமலென்றால் என்ன வெறியோ அதே வெறி MJ மீதும் இருந்தது. அவரது Beat it சிறுவயதில் எனக்கு செம பேவரைட். Billie Jeanல் அவர் நடத்திய Moon Walk எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
8 கிராமி அவார்டுகளை ஒரே இரவில் பெற்றவர். பாடகர், நல்ல நடனக்காரர் என்ற பிம்பங்களை தாண்டி மிக அருமையான இயக்குனர். கிராபிக்ஸ் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அவரது ஆல்பங்களுக்கு மிகச்சரியான முறையில் கிராபிக்ஸ்களை பயன்படுத்தினார். Black & Whiteல் அவர் பயன்படுத்திய மார்பிங் உத்தி அதன்பின்னர் பல பாப் பாடல்களிலும், திரைப்பாடல்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. நான் மார்பிங் படித்ததே அந்த பாடலைப் பார்த்து தான்.
MJவின் பாடல்கள் பல நடன இயக்குனர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் நல்ல ரெபரென்ஸ். டைரக்டர் ஷங்கர் இன்றுவரை MJ பாடல்களை வைத்தே விஷுவல்ஸ்களை ஒப்பேத்தி வருவது நல்ல உதாரணம். MJவின் Smooth Criminal முக்காலா முக்காப்புலா முதல் தீ.. தீ... ஜெகஜோதீ.. ஜோதீ.. ஜோதீ.. வரை பல வடிவங்களுக்கு மாறியிருக்கிறது. ஒரு ஆல்பத்தில் பரதநாட்டியத்தையும் மேற்கத்திய முறைக்கு மாற்றி அழகாக பயன்படுத்தியிருப்பார். They don't care of us பாடல் மூலமாக ஜாக்ஸன் புரட்சிக்காரனாகவும் அறியப்பட்டார்.
கருப்பர் இனத்தில் பிறந்தவரான மைக்கேல் ஜாக்சன் பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலமாக கிட்டத்தட்ட வெள்ளையராக உருவத்தில் மாறிவிட்டார். கின்னஸ் புத்தகம் வெளியீட்டாளர்களால் "Most Successful Entertainer of All Time" என்று பாராட்டப்பட்டவர். இதுவரை வெளியிடப்பட்ட இசை ஆல்பங்களிலேயே முறியடிக்கப்படாத சாதனை படைத்தது ஜாக்ஸனின் "த்ரில்லர்". அந்த ஆல்பம் மட்டும் 104 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி எட்டாத உயரத்தில் ஜாக்ஸனை நிறுத்தியது.
சமூகசேவைகளுக்காக தன் வருமானத்தில் பெரும் பகுதியை செலவழிப்பவர் ஜாக்ஸன். அவர் தற்போது வசிக்கும் இல்லம் அமெரிக்காவில் பெரும் பிரசித்தி பெற்றது. அவரது இல்லம் ஒரு தனி அரசாங்கம் என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் சொல்வார்கள். சர்ச்சைகளுக்கும் ஜாக்ஸன் வாழ்வில் குறையில்லை. திருமணம் - டைவோர்ஸ் - மீண்டும் திருமணம் - மீண்டும் டைவோர்ஸ் என்று பர்சனல் வாழ்க்கை அவருக்கு நிலையில்லாததாகவே இதுவரை இருந்திருக்கிறது.
அனாதை குழந்தைகளுடனான தவறான உறவு, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பில்லாமல் நிறுத்துவது, தேவையில்லாத விளம்பர ஸ்டண்ட் என்று ஜாக்ஸன் மீது அடுக்கடுக்காக (சில சமயங்களில் அபத்தமாக)குற்றங்கள் தொடர்ந்து சாட்டப்பட்டாலும் அவரது ரசிகர்களுக்கு அதைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை. அவர்கள் ரசிப்பது ஜாக்ஸனின் இசையையும், நடனத்தையும்... அதைத் தவிர்த்து ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளப் போவதில்லை.
உலகின் கடைசி மனிதனுக்கு காது கேட்கும் வரை MJன் இசை காற்றில் வியாபித்திருக்கும்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபோது எழுதியது. இசை மீண்டும் ஒருமுறை இறந்துவிட்டது! :-(
1958ல் பிறந்த மைக்கேல் ஜாக்சனுக்கு இப்போது வயது 49 (கரெக்டா சொல்லிட்டேன்!). அவர் பாடும் மொழி புரியாதென்றாலும் :-( நடனமும், பீட்டும் கால்களை தாளம் போட வைக்கும். சிறுவயதில் கமலென்றால் என்ன வெறியோ அதே வெறி MJ மீதும் இருந்தது. அவரது Beat it சிறுவயதில் எனக்கு செம பேவரைட். Billie Jeanல் அவர் நடத்திய Moon Walk எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
8 கிராமி அவார்டுகளை ஒரே இரவில் பெற்றவர். பாடகர், நல்ல நடனக்காரர் என்ற பிம்பங்களை தாண்டி மிக அருமையான இயக்குனர். கிராபிக்ஸ் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அவரது ஆல்பங்களுக்கு மிகச்சரியான முறையில் கிராபிக்ஸ்களை பயன்படுத்தினார். Black & Whiteல் அவர் பயன்படுத்திய மார்பிங் உத்தி அதன்பின்னர் பல பாப் பாடல்களிலும், திரைப்பாடல்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. நான் மார்பிங் படித்ததே அந்த பாடலைப் பார்த்து தான்.
MJவின் பாடல்கள் பல நடன இயக்குனர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் நல்ல ரெபரென்ஸ். டைரக்டர் ஷங்கர் இன்றுவரை MJ பாடல்களை வைத்தே விஷுவல்ஸ்களை ஒப்பேத்தி வருவது நல்ல உதாரணம். MJவின் Smooth Criminal முக்காலா முக்காப்புலா முதல் தீ.. தீ... ஜெகஜோதீ.. ஜோதீ.. ஜோதீ.. வரை பல வடிவங்களுக்கு மாறியிருக்கிறது. ஒரு ஆல்பத்தில் பரதநாட்டியத்தையும் மேற்கத்திய முறைக்கு மாற்றி அழகாக பயன்படுத்தியிருப்பார். They don't care of us பாடல் மூலமாக ஜாக்ஸன் புரட்சிக்காரனாகவும் அறியப்பட்டார்.
கருப்பர் இனத்தில் பிறந்தவரான மைக்கேல் ஜாக்சன் பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலமாக கிட்டத்தட்ட வெள்ளையராக உருவத்தில் மாறிவிட்டார். கின்னஸ் புத்தகம் வெளியீட்டாளர்களால் "Most Successful Entertainer of All Time" என்று பாராட்டப்பட்டவர். இதுவரை வெளியிடப்பட்ட இசை ஆல்பங்களிலேயே முறியடிக்கப்படாத சாதனை படைத்தது ஜாக்ஸனின் "த்ரில்லர்". அந்த ஆல்பம் மட்டும் 104 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி எட்டாத உயரத்தில் ஜாக்ஸனை நிறுத்தியது.
சமூகசேவைகளுக்காக தன் வருமானத்தில் பெரும் பகுதியை செலவழிப்பவர் ஜாக்ஸன். அவர் தற்போது வசிக்கும் இல்லம் அமெரிக்காவில் பெரும் பிரசித்தி பெற்றது. அவரது இல்லம் ஒரு தனி அரசாங்கம் என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் சொல்வார்கள். சர்ச்சைகளுக்கும் ஜாக்ஸன் வாழ்வில் குறையில்லை. திருமணம் - டைவோர்ஸ் - மீண்டும் திருமணம் - மீண்டும் டைவோர்ஸ் என்று பர்சனல் வாழ்க்கை அவருக்கு நிலையில்லாததாகவே இதுவரை இருந்திருக்கிறது.அனாதை குழந்தைகளுடனான தவறான உறவு, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பில்லாமல் நிறுத்துவது, தேவையில்லாத விளம்பர ஸ்டண்ட் என்று ஜாக்ஸன் மீது அடுக்கடுக்காக (சில சமயங்களில் அபத்தமாக)குற்றங்கள் தொடர்ந்து சாட்டப்பட்டாலும் அவரது ரசிகர்களுக்கு அதைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை. அவர்கள் ரசிப்பது ஜாக்ஸனின் இசையையும், நடனத்தையும்... அதைத் தவிர்த்து ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளப் போவதில்லை.
உலகின் கடைசி மனிதனுக்கு காது கேட்கும் வரை MJன் இசை காற்றில் வியாபித்திருக்கும்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபோது எழுதியது. இசை மீண்டும் ஒருமுறை இறந்துவிட்டது! :-(
No comments:
Post a Comment