Tuesday, April 28, 2009

நட்பு காலங்கள்..


பெய்யெனப் பெய்யும் காதல் மழை

Reply Quote

ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த

அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...

தபு சங்கர் கவிதைகள் ...


என்னுடையது என்று நினைத்துதான்
இது வரையில் வளர்த்து வந்தேன்.

ஆனால்..
முதல் முறை உன்னை பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய் குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே ..
இந்த மனசு!..

************************
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.

**************************

உன்னை கேலி பேசுபவனை எல்லாம்
முறைத்து பார்க்கிறாய் .
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதரனமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே!..

**********************

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணசீட்டு
வீதியில் கிடந்தது புலம்பிகொன்ன்டிருந்தது
பயணம் முடிந்து விட்டதை நினைத்து.

**********************


துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு .

***********************

தொலை பேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது.

***********************

எல்லா பெண்களும்
உதட்டை அழகாய் காட்டுவதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான் உதட்டின் அழகை மறைதுக்கொள்வதர்க்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாய் .
*******************

எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியதுதான் எனினும்
ஒரு கவிதைகூட உன்னை மாதிரி இல்லையே.

********************