Tuesday, May 26, 2009

முத்தக் கவிதைகள்

kiss2.jpg

உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ?

kiss2.jpg

எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள முடியும்
உன்
மெல்லிய முத்தத்தைத் தவிர.

kiss2.jpg

உயிரும் உயிரும்
மேலேறி
கூடு விட்டுக் கூடுபாயும்
மந்திரம் கற்குமிடம்
நம்
உதடுகள் சந்திக்குமிடமா ?

kiss2.jpg

நீ
மழலைத் தெருவில்
முத்தம் விதைத்து நடக்கிறாய்
என்னைக் கண்டதும்
கருமியாகிறாய்.

kiss2.jpg

வல்லினம் மட்டுமே
யுத்தத்துக்குப் பயன்படுமென்று
உன்
முத்தத்துக்கு முன்பு வரை
ஒத்துக் கொண்டிருந்தேன்
நான்.

kiss2.jpg

ஒத்தடம்
காயம் தருமென்பதை
உன்
உதடுகள் தானடி
உறுதிப் படுத்தின
kiss2.jpg

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.

kiss2.jpg

உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என்
பருகுதலை
பின்வாங்க மறுக்கிறேன்.

என்
தன்னம்பிக்கை முனையில்
தற்கொலை செய்கின்றன
தயக்கங்கள்

kiss2.jpg

முத்தப் போருக்கு
நீ
தயாரா ?
எனக்கு
புறமுதுகு பழக்கமில்லை.

kiss2.jpg

உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா

kiss2.jpg
நீ
என் உதடுகளில்
போர்த்திச் சென்ற முத்த ஆடை
என்
உள்ளத்துக் குளிரை
அள்ளிக் குடித்து,
வெப்பம் ஊற்றிப் போகிறது.

கண்களில் மட்டும்,
இன்னும் விலகவில்லை
துருவத்துக் குளிரின்
பருவத் துள்ளல்.

kiss2.jpg

உனக்கான முத்தங்களை
என்
படுக்கைத் தலையணையில்
தவறாமல் இட்டு வைக்கிறேன்.
என்றேனும்
மறக்காமல் வந்து
பெற்றுப் போ,
தலையணையை.
kiss2.jpg

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.


தேவதை தரிசனம்!

நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.

உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.

இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.


பெண் !..

கள்ளிப்பாலை
கவனமாய்
ஊற்று.
தொண்டைக் குழிக்குள்.

வேகமாய் சுற்றும்
மின் விசிறி இருந்தால்
சுவிட்சைப் போட்டு
கதவைப் பூட்டு.

இல்லையேல்
தண்ணீர் தொட்டிக்குள்
தூக்கிப் போடு.

அல்லது
கொஞ்சம் நெல்லையாவது
வாய்க்குள் போடு.

அப்படியே
வீட்டுக்கும் தீ வை.

இருபது வருடம் கழிந்து
இடிவிழவும்
சாத்தியமுண்டு.

இப்படியும் எழுதலாம்

rr1

நிலவில் நடப்பதை
விட
நிலவுடன் நடப்பதே
பெருமை
காதலுக்கு

2

காதல்
வாழ்க்கையைத் தருமாம்
மரணங்கள்
சொல்கின்றன

3

முதல் பார்வையில்
காதல் வருமென்பதை
நம்புங்கள்
இல்லையேல்
காதல் வருகையில் தான்
முதல்
பார்வை வருமென்பதையேனும்

by


பெண் பார்த்தல்…

dsc_0198

நாளை
உன்னைப்
பெண்பார்க்கப் போகிறேன்.

நம்
ஜாதகங்கள்
சில நாட்களுக்கு முன்
சந்தித்து
வருத்தமற்ற பொருத்தமென்று
கைலுக்கிக் கொண்டன.

உன்
சுற்றத்தோடு
என்
தூரத்து சொந்தங்கள்
தொலைவிலிருந்தே
தகவல் திரட்டிய
அத்தனை
ஆய்வு அறிக்கைகளும்
சாதகமாகவே அமைந்தன.

உன்
மத நம்பிக்கைகளையும்
என்
மத நம்பிக்கைகளையும்
மதில் சுவருக்கு வெளியே நின்று
யாரோ
ஒப்பிட்டுச் சொல்லி
சந்தோஷித்தார்கள்.

உன்
பொருளாதார பலமும்,
என்
நிகழ்கால வளமும்
நமக்கு எதிராய்
சதி வலைகள் பின்னவில்லை.

நீ என்னையோ
நான் உன்னையோ
சந்தித்ததில்லை,
எனக்குள்
விரியும் எதிர்பார்ப்பு தான்
உனக்குள்ளும் எரியும் என்பது
புரிகிறது எனக்கு.

நாளை
உன்னிடம் பேசப்போகும்
முதல் வாக்கியம்
என்ன என்பது மட்டும்
சிக்கவேயில்லை இன்னும்.

ஏதேனும்
யோசித்து வைத்திருக்கிறாயோ
நீ
என்னிடம் பேச

அடக் கடவுளே !

god

அழித்தவனும் சொன்னான்
அழிப்பவனும் சொல்கிறான்
ஆண்டவன் என் பக்கம்.

ஆத்திகர்கள்
குழுக்களாய்
ஆர்ப்பரித்தார்கள்

நாத்திகர்கள்
நகம் கடித்து
நகைத்தார்கள்.

ஆண்டவன் திகைத்தான்,
யாருமில்லையா
என் பக்கம் ?

உலகை உலுக்கிய செய்திப்படம்


நரகமல்ல, அதைவிடக் கொடியது !

zim1

உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது.

ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன.

zim3

நிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது.

ஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது.

இந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழாயிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு.

zim2

ஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன.

காட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார்.

ஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது,

zim5

வெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன் மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க.

ஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர்.

zim4

பொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது.

எத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜிம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

உணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள்.

அடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள்.

அப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன.

இந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர்.

zim6

ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது.

ஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.

குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !


விடைபெறுகிறார் பிரபாகரன்!? என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது.

குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம்.

வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந்திருக்கும் என்பதால் இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா!

குமுதம்: உங்களுக்கு ராகுல்வின்சியைத் தெரியுமா? இது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு ராகுல் கொடுத்த பெயர். ராகுல் காந்தி என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் இந்த மாற்றமாம்.

வினவு: ராகுல் காந்தி படிப்பில் மகாமட்டம் என்பது உலகறிந்த விசயம். இதில் ஹார்வர்டில் எப்படிச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் மகா ரகசியம். இந்த தலைமறைவு வாழ்க்கையில் அவர் தனது கொலம்பியா தோழியுடன் ஊர்சுற்றி விட்டு இப்போது பிரதமர் இமேஜூக்குகாக அந்த அப்பாவிப் பெண்ணை கழட்டி விட்டதாக அறிகிறோம். உண்மையா?

குமுதம்: விமானப் பயணங்களின் போது ராகுல் மறக்காமல் எடுத்துச் செல்வது புத்தகங்கள். அரசியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள் உட்பட சற்று கனமான டாபிக்குகள் ராகுலின் சாய்ஸ்.

வினவு: தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் நடிகைகள் ஆங்கிலமே தெரியாவிட்டாலும் பந்தாவுக்காக ஆங்கில கிரைம் நாவல்களைப் படிப்பதாக பேட்டியில் அளப்பார்கள். கல்லூரியின் பாபா பிளக்ஷிப் பாடத்திட்டத்தை படிப்பதற்கே ஸ்போர்ட்ஸ் கோட்டா தேவைப்பட்டவர் இப்படி கண்ட கண்ட கனதியானதை எல்லாம் படிக்கிறார் என்றால்…..?

குமுதம்: வெளிநாடுகளில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது அவரது ஆசை மும்பையில் ஒரு அவுட் சோர்ஸிங் கம்பெனி நடத்த வேண்டும் என்பதுதான்.

வினவு: காங்கிரசு ஆட்சியில் இந்தியாவையே முழுதாக விற்றுவிட்டு அவுட்சோர்சிங் செய்கின்ற வேளையில் ராகுல் அந்த சின்ன ஆசையை மறந்ததில் என்ன வியப்பு?

குமுதம்: நிருபர்களுக்கு ராகுல் ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்கிற ஒரே கேள்வி, “அமிதாப்பச்சன் பற்றி என்ன நினைக்கிறீங்க?” அமிதாப் குடும்பம் என்றாலே ராகுலுக்கு அல்ர்ஜியாம்.

வினவு: டாடி இந்திய அமைதிப் படையை ஈழத்திற்கு அனுப்பி எத்தனை தமிழ் மக்களைக் கொன்றார் என்று கேட்டால் அவருக்கு அலர்ஜி இல்லாமல் போகுமா என்ன?

குமுதம்: அரசியலில் இல்லாத தனது நண்பர்கள் மூலம் உத்தரப் பிரதேசத்தில் அடிக்கடி ரகசிய கருத்துக் கணிப்புகள் நடத்தி, மக்களின் நாடி பிடித்துப் பார்ப்பது ராகுலின் வழக்கம்.

வினவு: செட்டி நாட்டு சிதம்பரத்திற்காக தேர்தல் பரப்புரை செய்ய சிவகங்கை வந்த ராகுலுக்கு எமது தோழர்கள் கருப்புக்கொடி காண்பித்து முழக்கமிட்டதும் அவரது பேர்&லவ்லி முகம் இருண்டுபோனது. அடுத்த முறை இங்கும் கணிப்பு எடுத்து விட்டு வரவும்.

குமுதம்: மிதுன ராசிக்காரரான ராகுலுக்கு வாட்ச், மோதிரம் அணிவதில் விருப்பம் கிடையாது. அக்கா கட்டிய ராக்கியை தனது சென்டிமெண்ட்டாக நினைத்து தேர்தலின்போது அணிந்திருந்தார்.

வினவு: தங்கை பிரியங்காவை அக்காவாக குமுதம் ஏதோ தமிழ்நாட்டு அக்காவை நினைத்து எழுதிவிட்டது போலும். போகட்டும். தங்கை பாட்டி இந்திராவின் சேலையை சென்டிமெண்ட்டாக அணிந்து தேர்தல் பரப்புரை செய்து எல்லோரிடமும் இதுதான் இந்திரா சேலை என பீற்றினாராம். அதுபோல அப்பாவின் குர்தாவை ராகுல் அணியலாம். இதையெல்லாம் நியூசாக்கி காசு பார்ப்பதற்கு இளித்தவாய இந்தியர்கள்தான் இருக்கிறார்களே.

குமுதம்: அக்கா பிரியங்கா காந்தியின் செல்லக் குழந்தைகள் மிராயாவும், ரைகானும்தான் ராகுலின் ஃபேவரைட் புஜ்ஜிமாக்கள்.

வினவு: பின்னே ஈழத்தில் பெற்றோரை குண்டுவீச்சில் இழந்து கதறிக்கொண்டிருக்கும் குழந்தைகளா அவருக்கு பிடிக்கும்?

குமுதம்: ராகுலுக்குப் பிடித்த விளையாட்டுகள் ஸ்குவாஷூம், செஸ்ஸும், ஸ்கூபா டைவிங்கும்.

வினவு: டாடிக்கு விமானம் ஓட்டுவது பிடிக்கும். மம்மிக்கு என்ன பிடிக்கும்?….சிங்கள விமானங்கள் போடும் குண்டுகள்…..?

பிரிந்தோமா?