அன்பே !..
உன் நினைவுகளுக்கு நீண்ட தூக்கம்
என் மரணம் !..
......................
மறக்கமுடியாதது..
அன்பே!..
மறக்கமுடியாதது!..
நீ பார்த்த முதல் பார்வை.
மறக்கமுடியாதது!..
நீ உதிர்த்த முதல் புன்னகை.
மறக்கமுடியாதது!..
நீ பேசிய முதல் வார்த்தை.
மறக்கமுடியாதது!..
நீ தந்த முதல் முத்தம்..
மறக்கமுடியாதது!..
நீ அளித்த என் பிறந்தநாள் பரிசு.
அன்பே!..
மறக்கமுடியாததுதான்!..
நீ கடைசியாக கொடுத்து அனுப்பிய உன் திருமண அழைப்பும்.
.................................................
அன்று..
அமாவசை இரவு..
ரசிக்கமுடிந்தது ஒரு முழு நிலவை.
என்னை கடந்து போன என்னவள்!..
...........................................
வலை வீசியும்,
தூண்டில் போட்டும்,
காத்திருக்கிறார்கள் மீனவர்கள்..
நல்லவேளை!..
என்னவள் தூங்கிகொண்டிருக்கிறாள்.
.................................................
புதிய மாதவி நேர்காணல் -2
1 week ago
No comments:
Post a Comment